மணம் வீசும் மசாலா முட்டை பணியாரம்! ரெசிபி இதோ...
இனிப்பு பணியாரம், கார குழிப்பணியாரம் இல்லாமல் புது விதமான மசாலா முட்டை பணியாரம் செய்து சாப்பிட்டு பாருங்கள். சுவை வித்தியாசமாக இருக்கும்.
தேவையான பொருட்கள் முட்டை -4, தேங்காய் துண்டுகள் - 1/4 கப், பொட்டுக்கடலை - 3 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, சீரகம், மிளகு தலா 1 டீஸ்பூன்
பூண்டு - 2 பல், இஞ்சி - 1 துண்டு, பெரிய வெங்காயம் - 1, கறிவேப்பிலை, கொத்தமல்லி - 1 கொத்து, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை: ஒரு பாத்திரத்தில் நான்கு முட்டைகளையும் உடைத்து ஊற்றிக் கொள்ளவும். அதில், வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
மிக்சியில் தேங்காய் துண்டுகள், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகு அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
இந்த அரைத்த கலவையை, முட்டையுடன் சேர்த்து கொத்தமல்லி இலைகள் துாவி நன்றாக கலக்கவும்.
பின்னர், பணியார கல்லில் எண்ணெய் சேர்த்து கலந்து வைத்துள்ள முட்டையை பணியார கல்லில் ஊற்றி, இரண்டு பக்கமும் வேகவைத்து எடுத்தால் மசாலா முட்டை பணியாரம் தயார்.
இந்த பணியாரத்தை மாலை வேளையில் தக்காளி சட்னியுடன் வைத்து சாப்பிட்டால், சுவை தாறு மாறாக இருக்கும்.