அதிகரிக்கும் துாக்கமின்மை...!
உடல்நலனுக்கு துாக்கம் மிக அவசியம். குறிப்பாக உடலின் வளர்ச்சிக்குக் காரணமான ஹார்மோன்கள் இரவில்தான் சுரக்கும்; 6 - 8 மணி நேரம் அவசியம் என்பது டாக்டர்களின் அட்வைஸ்.
தற்போது இந்தியாவில் 54% பேர் துாக்கம் தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமும் ஒரே நேரத்தில் இல்லாமல் வெவ்வேறு நேரத்தில் துாங்குவதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார்அமைப்பு சார்பில் டில்லி, பெங்களூரு உட்பட 10 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 1,000 பேரிடம் ஆய்வு நடத்தியது.
இதில் 54 % பேர் துாக்கம் தொடர்பான பிரச்னை இருப்பதாகவும், ஆனால் துாங்கும் நேரத்தை ஒரே மாதிரி அமைத்துக் கொண்டால், அதிலிருந்து விடுபட முடிவதாக தெரிவித்துள்ளனர்.
மாலை 5 மணிக்கு மேல் டீ, காபி போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இரவு தூங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பே லேசான உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.
சிறந்த தூக்கத்துக்கு இரவு உணவிற்கு பிறகு சிறிது நேரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.
கட்டாயமாக இரவில் டிவி, மொபைல் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.