வைட்டமின் டி நிறைந்த உணவுகள் சில...
வைட்டமின் டி சத்து எலும்பு பலத்திற்குஅதற்கு மட்டுமின்றி புற்றுநோய், டைப் 2 நீரிழிவு, இதய பாதிப்பு போன்ற பல நோய்கள் வராமல் தடுப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சில உணவுகளில் இயற்கையாகவே வைட்டமின் டி நிறைந்துள்ளது. அவற்றை குறித்து தெரிந்துக்கொள்வோம்.
பாலாடைக்கட்டி, பால் மற்றும் சோயா பால் ஆகியவற்றில் வைட்டமின் டி உள்ளது.
சால்மன் மீன், மத்தி மீன், சூரை மீன், முட்டையின் மஞ்சள் கரு, செறிவூட்டப்பட்ட தானியங்கள், ஆகியவற்றில் இவை உள்ளது.
ஆரஞ்சு பழச்சாறுகளில் வைட்டமின் டி நிறைவாக உள்ளது. குறிப்பாக 250 மிலி ஆரஞ்சு சாறில் 2.5 எம்.சி.ஜி வைட்டமின் டி இருக்கும் என கூறப்படுகிறது.
ஹார்ட் லிவர் எண்ணெய் இவை காணபடுகிறது. ஒரு ஸ்பூன் ஆயிலில் 11.25 எம்.சி.ஜி வைட்டமின் டி உள்ளது.
இவை தவிர நண்பகல் நேர சூரிய ஒளியிலிருந்து வரும் புற ஊதா கதிர்கள் - பி (UVB) மூலம் நம் உடலே வைட்டமின் டி3 மற்றும் டி2-வை உற்பத்தி செய்யும்.