அடிக்கடி வெள்ளரிக்காய் சாப்பிடுவதால்...!
வெள்ளரிக்காயில் சோடியம், கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
மார்பகம், கருப்பை, சினைப்பை மற்றும் ப்ராஸ்டேட் போன்ற உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படும் ஆபத்தை குறைக்கும் திறனுள்ள பாலிஃபீனால் சத்துக்கள் இதிலுள்ளன.
இதிலுள்ள ஃபிசெடின் என்ற அழற்சி தடுப்பு ரசாயனம், நினைவாற்றலை மேம்படுத்தும். வயதாவதால் நரம்பு செல்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதுடன், அல்சீமர் நோய் பாதிப்பை குறைக்கும்.
உடலில் ஏற்படும் அழற்சிகளை தடுத்து அல்லது பாதிப்பைக் குறைத்து உடலை குளிர்ச்சியாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன் ஆகியவை நோய் ஏற்படும் வாய்ப்பை குறைத்து ஆயுளை அதிகரிக்கின்றன. 95% வரை நீர்ச்சத்து இருப்பதால் உடலை நீரேற்றமாக வைக்கிறது.
சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கும் வெள்ளரியில் கலோரி அளவு மிகவும் குறைவு என்பதால் உடல் எடை குறைப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது.
இதில் அதிகளவில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் சிலிக்கான் இருப்பதால் ஸ்பா மற்றும் அழகு சாதன நிறுவனங்களில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதை சருமத்தில் பயன்படுத்தும்போது பரு, ப்ளாக்ஹெட்ஸ், சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கலாம். கண்கள் சோர்வாகவும், கருவளையத்தால் பாதிக்கப்படுவதையும் தவிர்க்கலாம்.
இன்சுலின் சுரப்பதற்கு அவசியமான ஹார்மோன் பண்பு வெள்ளரியில் உள்ளதால், கொழுப்பு சேர்வதை தடுத்தல், எடையை பராமரித்தல் என நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உகந்தது.