ஹெல்த்தியான கத்தரிக்காய் சட்னி ரெசிபி

தேவையானப் பொருட்கள்: பிஞ்சு கத்தரிக்காய் - 10, தக்காளி - 3, காய்ந்த மிளகாய் - 5, சின்ன வெங்காயம் - 10, பூண்டு பல் - 10

உளுந்து - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி, புளி, உப்பு - சிறிதளவு, நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, தண்ணீர் - தேவையான அளவு.

காய்ந்த மிளகாய், உளுந்து, பூண்டு, கொத்தமல்லியை வறுக்கவும்.

இவற்றுடன் வேக வைத்த கத்தரிக்காய், தோல் உரித்த தக்காளி, சின்ன வெங்காயம், உப்பு, புளி கரைசல் சேர்த்து அரைக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சூடானவுடன், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை கலக்கவும்.

சில நிமிடங்களில் எண்ணெய் பிரிந்ததும் இறக்கி ஆற விடகும். இப்போது, சுவையான மற்றும் ஆரோக்கியமான கத்தரிக்காய் சட்னி ரெடி.

இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட சுவை அள்ளும்.