40 வயதுக்கு மேல் புதிதாக சைக்கிளிங் செய்ய முயற்சிப்பவரா நீங்க?
உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பைக் கரைக்க சைக்கிளிங் சிறந்த உடற்பயிற்சியாக உள்ளது.
சைக்கிளிங்
செய்யும்போது நுரையீரல் ஆக்ஸிஜனை அதிகமாக எடுப்பதால், இதயத்தின்
ஆரோக்கியமும் நுரையீரலில் ஆரோக்கியமும் அதிகரிக்கும். இதற்கு வயது வரம்பும்
கிடையாது.
இதுவரை எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருந்தவர்கள், திடீரென்று 40 வயதில் இதையெல்லாம் செய்யத் துவங்குவர். குறிப்பாக சைக்கிளிங் செய்ய நினைப்பர்.
அப்படிப்பட்டவர்கள் தங்கள் இதய ஆரோக்கியம், ரத்த
அழுத்தம் குறித்து டாக்டரிடம் கலந்தாலோசித்து, நார்மல் என்றால் மட்டுமே
சைக்கிளிங் செய்ய வேண்டும்.
ஏனென்றால், இதயத்தில் சிறியளவில் ஏதேனும் பிரச்னை இருந்தால் கூட, திடீரென சைக்கிளிங் செய்யும்போது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இதேபோல், ரத்த அழுத்தம் அதிகமாக இருந்து, அது தெரியாமலேயே திடீரென சைக்கிளிங் செய்ய ஆரம்பித்தால் பக்கவாதம் போன்ற பிரச்னைகளும் வரக்கூடும்.
அதேவேளையில் 40 வயதுக்கும் குறைவாக இருந்தாலும், உடல்
பருமனானவர்கள் புதிதாக சைக்கிளிங் செய்யும் முன் கட்டாயமாக டாக்டரிடம்
கலந்தாலோசிக்க வேண்டும்.
அதிகாலை நேரத்தில் சுத்தமான ஆக்ஸிஜன் அதிகம் கிடைக்கும் என்பதால் இதுதான் சைக்கிளிங் செய்வதற்கு மிகச்சரியான நேரம்.