46 % பேருக்கு அறிகுறி இல்லா இதய பாதிப்பு... ஆய்வறிக்கையில் தகவல்
சமீபத்தில் 'ஹெல்த் ஆப் தி நேஷன் ஆய்வறிக்கை - 2025' வெளியிடப்பட்டுள்ளது.
அதில், இந்தியாவில் மதுப்பழக்கம் உடைய, 85 % பேருக்கு
கல்லீரல் பாதிப்பு, 46 % பேருக்கு அறிகுறி இல்லாமல் இதய பாதிப்பு இருப்பது
கண்டறியப்பட்டது.
மாதவிடாய் நின்ற பிறகு, நீரிழிவால் 40 % பேர், உடல் பருமனால் 86 % பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கல்லுாரி மாணவர்களில், 28 % பேர் உடல் பருமனாகவும், அவர்களில், 19 % பேருக்கு, உயர் ரத்த அழுத்த பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 77 % பெண்கள், 82 % ஆண்கள், 'வைட்டமின் டி' குறைபாடுடன் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, நோய்களுக்கான அறிகுறிகள் உடலில் தெரியும் முன், பரிசோதனை செய்து நோயை தடுக்க வேண்டியது அனைவரின் கடமையாகும்.
அந்தந்த வயதுக்கு ஏற்ற, பாலினத்துக்கு ஏற்ற சேவைகள் வாயிலாக, பெண்களுக்கான, தனித்துவமான தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.