பெண்கள் உடற்பயிற்சி செய்யவில்லை என்றால் சிக்கலா? ஆய்வில் தகவல்!
நம் நாட்டில் ஆண்களை விட பெண்கள் மத்தியில் உடற்பயிற்சியின்மை வெகுவாக அதிகரித்து இருப்பதாக 'லான்செட்' என்ற சர்வதேச மருத்துவ இதழில் ஒரு ஆய்வுக் கட்டுரை வெளியாகி உள்ளது.
உடற்பயிற்சி செய்வதில் பெண்கள் ஏன் ஆர்வம் காட்டுவதில்லை என்று ஆராய்ந்ததில், வயதிற்கு வந்த பின், வெளியே செல்லக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இருப்பதாக தெரியவந்தது.
குறிப்பாக டீன் - ஏஜ் எனப்படும் வளர் இளம் பருவத்தில் ஹார்மோன் மாற்றங்கள் இத்துடன் அதிக கலோரி உள்ள உணவு, மன அழுத்தம், துாக்கமின்மை என்று பல காரணங்களும் சேர்ந்து, பல பாதிப்பு வருகிறது.
தற்போது பெண்களுக்கு, 30 வயதில் பலவித ஹார்மோன் கோளாறுகள், மாதவிடாய் பிரச்னைகள், முழங்கால், மூட்டு வலி என்று வருகிறது.
உடற்பயிற்சி இல்லாததாலேயே பெண்களின் உடல் அமைப்பு குழந்தை பெற்ற பின் மாறிவிடுகிறது. மேலும் சிறு வயதில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு அதிகரிப்பதை பார்க்கிறோம்.
அதுவே தினமும் 30 நிமிடம், நடனம், நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்வதால் மன அழுத்தம், அதிக ஹார்மோன் சுரப்பு ஆகியன கட்டுக்குள் வரும்; மாதவிடாய் சுழற்சி சீராகும். உடல், மன ஆரோக்கியம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.