நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் துாக்கம் ஏன் அவசியம்?
ஒரு மனிதன் தனது வாழ்நாட்களில் 75 ஆண்டுகள் வாழ்ந்தால் அவர் கட்டாயமாக 25 ஆண்டுகள் துாக்கத்தில் கழித்திருக்க வேண்டும்.
ஏனெனில் நம் மூளையின் செயல்பாடு நாம் உறங்கும் போதுதான் மிக அதிகளவில் இயங்கும்.
நாம் துாக்கம் சமயத்தில்தான் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் ஓய்வு எடுப்பதுடன், தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும்.
நம் மூதாதையரிடம் ஒரு பழக்கம் இருந்தது. அது முன்னிரவு துாக்கம், பின்னிரவு துாக்கம் என்பார்கள். முன்னிரவில் 7 மணிக்கு துாங்கி, நள்ளிரவு 12 அல்லது 1 மணிக்கு எழுந்துவிடுவர்.
பின் அரை மணி நேரம் கழித்து துாங்கி, அதிகாலை 4:00 மணிக்கு எழுந்துவிடுவர். இது மனித உடலுக்கான ஆரோக்கியமான துாக்கமாக மனநல மருத்துவம் பரிந்துரைத்துள்ளது.
ஆனால் தற்போது முன்னிரவு துாக்கம் என்பது யாரும் துாங்குவது இல்லை. இதனால்தான் அதிகளவில் மனநல பாதிப்புகள் ஏற்பட்டு, அது உடல்நல பாதிப்பாக உருவெடுத்து விடுகிறது.
எப்படியோ வாழ்க்கையில் எதை செய்கிறீர்களோ இல்லையோ நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் தொடர்ந்து துாங்கிவிட்டால் நம்மை அது பல பாதிப்புகளில் இருந்து காப்பாற்றும்.