இதயநோய் பாதிப்பை தடுக்கும் நிலக்கடலை
நிலக்கடலையில் கார்போஹைட்ரேட், போலிக் ஆசிட், கால்சியம், மாங்கனீசு மற்றும் புரோட்டின் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இதை தொடர்ந்து சாப்பிட்டு வர எலும்பு தொடர்பான நோய்களை தடுக்கலாம்.
இதிலுள்ள கொழுப்புகளில் 70 % நன்மை விளைவிக்கக்கூடியது என்பதால், உடலில் கொழுப்பு சத்தை அதிகரிக்காது.
நிலக்கடலையிலுள்ள, 'ரெஸ்வரெட்ரால்' சத்து இதய நோய் பாதிப்புகளை தடுக்க உதவுகிறது.
பாலிபீனால்கள் இளமையை பராமரிக்க பயன்படுகிறது.
நியாசின் சத்து மூளை வளர்ச்சிக்கு டானிக் போல் செயல்படுகிறது. மன அழுத்தத்தை போக்குகிறது.
தினமும்
சிறிதளவு வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளை உட்கொண்டால் இதய நோய்,
ஞாபகமறதி, புற்றுநோய் உடல் பருமன், நீரிழிவு ஆகிய நோய்கள் வராமல் காக்கலாம்
என ஆய்வுகள் கூறுகின்றன.