இன்று சீன மொழி தினம் !
ஐ.நா., சபையில் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக ஆங்கிலம், சீனம், அரபு, பிரெஞ்சு, ரஷ்ய, ஸ்பானிஷ் என மொத்தம் ஆறு மொழிகள் உள்ளன.
இந்த ஆறு மொழிக்கும் சம வாய்ப்பு அளிக்கும் விதமாக, இதிலுள்ள ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தினத்தை ஐ.நா., உருவாக்கியது.
யுனெஸ்கோ (ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பகுதி) முதன்முதலில் 2010 இல் சீன மொழி தினத்தை உருவாக்கியது
இதன்படி ஏப். 20ல் உலக சீன மொழி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சீன எழுத்துக்களைக் கண்டுபிடித்த காங்ஜியையும் இந்த நாள் கொண்டாடுகிறது.
உலகில் அதிக பேர் (130 கோடி) பேசும் மொழியாக சீனம் உள்ளது.
இது 1946ல் ஐ.நா., சபையின் அங்கீகரிக்கப்பட்ட மொழியாக சேர்க்கப்பட்டது.