அதிக ஸ்கிரீன் டைமால் வரும் தலைவலி! காரணமும் தீர்வுகளும்!
தொடர்ந்து கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், அலைபேசியை பயன்படுத்துபவர்களுக்கு கண்களில் உள்ள நீர் வறண்டு தலைவலி ஏற்படுகிறது.
அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை செய்பவர்கள், தொடர்ந்து அலைபேசி பார்ப்பவர்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்களுக்கு 5 முதல் 10 நிமிடங்கள் ஓய்வு கொடுக்க வேண்டும்.
கிட்டப்பார்வையை தவிர்த்து துாரத்து பொருட்களை பார்க்க வேண்டும். தொடர்ந்து கண்களை இமைத்து பயிற்சி எடுக்க வேண்டும்.
தொடர்ந்து கம்ப்யூட்டர் பார்ப்பதால் கண்கள் இமைப்பதை கூட மறந்து விடுகிறோம். இதன் காரணமாக கண்களில் உள்ள மைக்ரோ தசைகள் பாதிக்கப்படுகிறது.
இதனால் கண்களில் எரிச்சல் ஏற்படும். பாதிப்புள்ளவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டர், அலைபேசிகள் பார்ப்பதை நிறுத்த
தினமும் நன்றாக துாங்கி கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட சத்தான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
டாக்டர் ஆலோசனையுட்ன கண்களுக்கான அலோபதி சொட்டு மருந்துகளை கண்ணில் விட்டால் கண் பார்வை பாதிப்பும், தலைவலியும் குறையும்.