மழைக்காலத்தில் ஏற்படும் சேற்றுப்புண்கள்... எப்படி சரிசெய்யலாம்?

மழைக்காலத்தில் சாலைகளில் தேங்கி இருக்கும் சேறு, சகதி மற்றும் கழிவு நீர் கலந்த மழைநீரால் கால் இடுக்குகளில் சேற்றுப்புண்கள் ஏற்படும்.

பொதுவாக சேற்றுப்புண் தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் நுண் கிருமிகளால் உருவாகும். இதை 'அத்தலட்ஸ்' புண் என அழைப்பதுண்டு.

முதலில் கால் விரல் இடுக்குகளில் புண்கள் ஏற்பட்டு அரிப்பு ஏற்படும். கவனிக்காமல் விட்டுவிட்டால், பாதிப்பு அதிகமாகும்.

குறிப்பாக நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் புண் வந்தால் விரைவில் ஆறாது என்பதால் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சேற்றுப்புண் வந்தால் மருத்துவர்களை உடனே பார்க்க வேண்டும்.

சில சமயம், காலணியிலும் கிருமிகள் இருக்கும். அதனால் காலணிகளையும் நன்றாக கழுவிய பின் சுத்தம் செய்து, உலர்ந்தபின்பே மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

பாதிப்பு உள்ளவர்கள் வெந்நீரில் சிறிதளவு உப்பு , எலுமிச்சை பழச் சாறு கலந்து கால்களை கழுவ நல்ல பலன் கிடைக்கும்.

பாதங்களை நன்றாக கழுவி பின்பு கொஞ்சம் வேப்பிலையுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்துப் பூசலாம்.

குளிக்கும் முன் தேங்காய் எண்ணெயுடன் மஞ்சளைக் சேர்த்து, பாதிக்கப்பட்ட காலில் தடவிக் குளிக்கலாம். இரவில் தூங்கும் முன்பும் தடவலாம். சேற்றுப்புண் விரைவில் குணமாகும்.

கால்களை காலை, இரவு வெந்நீரில் கழுவி கொள்ள வேண்டும். பின் மருதாணி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்துப் பூசலாம்.