வெயில் காலத்தில் ஏற்படும் சரும பிரச்னைகளை தவிர்க்க !

வெயிலின் போது வியர்வை அதிகமாக உற்பத்தியாகி தோலை விட்டு வெளியேறாமல் தோலினுள் நீர் கோர்ப்பது போன்ற அலர்ஜி ஏற்படுகிறது. இதனைத்தான் வேர்க்குரு என்கிறோம்.

வெயிலில் விளையாடிவிட்டு முகத்தை கழுவாமல் இருப்பதால் முகப்பரு அதிகமாகலாம்.

வறண்ட சூடான காற்று தோல் வறட்சியை ஏற்படுத்துவதால் தோல் அரிப்பு, எரிச்சல் உண்டாகும்.

காற்றோட்டம் இல்லாத உடை, இறுக்கமான உள்ளாடைகள் அணிதல், அடிக்கடி குளிக்காமல் இருப்பதால் தேமல், படர்தாமரை, முடியின் வேரில் சீழ் பிடித்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.

இவற்றை தவிர்க்க அடிக்கடி நீர் அருந்துதல், வெயிலில் இறுக்கமான உடைகள் அணிவதை தவிர்த்து இரு முறை வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம். ஆன்டிபயாட்டிக் சோப் பயன்படுத்தலாம்.

வெயிலில் போகும் முன்பு சன் ஸ்கிரீன், மாய்ஸ்சரைசர் போன்றவற்றை உபயோகிக்கவும். கூலிங் கிளாஸ், அகன்ற தொப்பி, முழுக்கை சட்டை போன்றவை வெயில் அலர்ஜியை தடுக்க பயன்படும்.