வெயில் காலத்தில் வேர்வையால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க !
வெயில் காலத்தை பொறுத்தவரை சருமத்துக்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.
வெயில் காலத்தில் வேர்வை அதிகளவில் வெளியேறும். சரியாக பராமரிக்காமல் இருந்தால் வேர்க்குரு, படை, சொறி சிரங்கு ஏற்படும்.
பூஞ்சை காளான் படை, சொரியாசிஸ் போன்றவை ஏற்கனவே உள்ளவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவர்.
காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். உள்ளாடைகளை துாய்மையாக பயன்படுத்த வேண்டும்.
ஆண்கள் ஜீன்ஸ் ஆடைகளை முடிந்தளவு தவிர்க்க வேண்டும்.
தண்ணீர் அதிகளவில் குடிக்க வேண்டும். நன்கு தேய்த்து குளிக்க வேண்டும். காற்றோட்டமாக உடலை பராமரிக்க வேண்டும்.