இன்று உலக ஹெபடைடிஸ் தினம்

ஹெபடைடிஸ் (கல்லீரல் அலற்சி)'பி','சி' வைரசால் கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இப்பாதிப்பால் உலகில் ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.

உடல் வலி, பசியின்மை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் தொடர்ந்து வெளியேறுதல், கண் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்றவை இதன் அறிகுறி.

'ஹெபடைடிஸ் பி' வைரசை கண்டறிந்து, அதற்கு தடுப்பூசியும் கண்டுபிடித்தார் அமெரிக்க விஞ்ஞானி பரூச் பிளம்பர்க்.

இதற்காக இவருக்கு 1976 ஆம் ஆண்டு உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இவரது சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இவரது பிறந்த தினமான ஜூலை 28ல் உலக ஹெபடைடிஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இத்தினத்தில் உலகெங்கிலும் உள்ள ஹெபடைடிஸ் நோயின் தாக்கத்தையும், அதைத் தடுக்கும் வழிகளையும் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.