அக்னி நட்சத்திரம் ஆரம்பம்! வெப்பத்தில் இருந்து தப்பிக்க டிப்ஸ்!!
வரும், 28ம் தேதி வரை, 25 நாட்களுக்கு இனி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் சமநிலையில் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
காரணம், வெயில் காலத்தில், வியர்வை மற்றும் சிறுநீர் வழியாக அதிகளவு நீர்ச்சத்து வெளியேறும்.
நீர்ச்சத்து குறைந்தால், தசைவலி, அதீத அசதி, மயக்கம் என பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும்.
எனவே, உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்க, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
பகல் நேரத்தில், வெளியில் செல்வதை பெரும்பாலும் தவிர்க்க வேண்டும்.
நீர் ஆகாரமான ஓ.ஆர்.எஸ்., கரைசல், எலுமிச்சை ஜூஸ், இளநீர், மோர் மற்றும் பழச்சாறுகள் அருந்தலாம்.
காற்றோட்டம் உள்ள மற்றும் வெப்பம் தணிந்த இடங்களில் இருத்தல் வேண்டும்.
குறிப்பாக, முதியவர்கள், பெண்கள் வெயிலின்போது, வெளியே செல்ல வேண்டாம்.
உடல் சோர்வாகவோ, மயக்கமாகவோ உணரும் போது, உடனடியாக டாக்டரின் ஆலோசனை பெற வேண்டும்.