பய உணர்வை அதிகரிக்க செய்யும் மொபைல் ஸ்க்ரோலிங்!

தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் வரை தங்களின் ஒவ்வொரு அசைவையும் வீடியோ எடுத்து, பல சமூக வலைதளங்களில் வெளியிடும் வேலையை மட்டுமே செய்பவர்கள் உள்ளனர்.

தொடர்ந்து இந்த வீடியோக்களை 'ஸ்க்ரோல்' செய்யும் இளைஞர்களுக்கு, ஒருவித பய உணர்வு ஏற்படுகிறது. இதை, FOMO - Fear Of Missing Out என்று கூறப்படுகிறது.

அதாவது, இவர்களை போன்று நாம் மகிழ்ச்சியாக இல்லையோ, எல்லா நேரமும் பிசியாக ஏதோ ஒன்றை இவர்கள் செய்கின்றனர்.

நாம் எதுவும் செய்யாமல் வீணாக இருக்கிறோமோ என்ற பயம். பொதுவாக இது போன்ற உணர்வு, 12 - 24 வயதினருக்கு அதிகம் உள்ளது.

இதை தவிர்க்க விடுமுறை நாட்களாக இருந்தாலும், தினசரி ஒழுங்குமுறையை கடைப்பிடிக்க அவர்களை பழக்க வேண்டும்.

விடுமுறையில் ஒரு மணி நேரம் விளையாட்டு, பாட்டு, இசை என்று எதில் ஆர்வம் உள்ளதோ, அதற்கான பயிற்சி வகுப்புகளுக்கு குழந்தைகள், இளைஞர்களை அனுப்பலாம்.

ஸ்க்ரோலிங் செய்வதன் மூலம் நேரத்தை செலவிடுவது என்பது மிகவும் எளிது, ஆனால், அவர்களின் பய உணர்வை மேலும் அதிகரிக்கச் செய்யும் என கூறப்படுகிறது.