குதிகால் வலி யாருக்கெல்லாம் வரும்? தீர்வு என்ன?
குதிகால் எலும்பிலிருந்து 'பிளான்டார் அப்போநீரோசிஸ்' எனும் திசுக்கள் கால் கட்டை விரல் வரை செல்லும். இந்த பகுதியில் எதாவது அழற்சி ஏற்பட்டு, வீக்கம் உண்டானால் குதிகால் வலி வரும்.
தினமும் நீண்ட நேரம் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கு, விளையாட்டு வீரர்கள், நின்று பணி செய்யும் போலீஸ், ராணுவ வீரர்கள் ஆகியோருக்கு வரும்.
ஓட்டப் பயிற்சி, ஜிம் பயிற்சி எடுக்கும் போது 'வார்ம் அப்' (Warmup) செய்யாமல் செய்தால் குதிகால் வலி ஏற்படும்.
ஹை ஹீல்ஸ், பிளாஸ்டிக் செருப்பு அணிபவர்களுக்குக் வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
எந்த வலிக்கும் முதல் தீர்வு ஓய்வு தான். ஓய்வு அவசியம் எடுக்கும்பட்சத்தில் வலி குறைய வாய்ப்புண்டு
சரியான மருத்துவரின் ஆவோசணையின் பெயரில் எதிர் மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம்.
காலின் குதிபாகத்தில் கூடுதல் பஞ்சு வைத்த காலணிகள் அணிவது நல்ல பலன் தரும். 'ஆங்கிள் சாக்ஸ்' (Pain relief AnkleSocks) பயன்படுத்தலாம்.
வலி வழக்கமாக ஏற்படும் போது பாதத்தை முன்னும் பின்முமாக 'ஸ்ட்ரெச்சிங்' (leg streching) பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது 20 முறை செய்யலாம்.
மிதமான சூட்டிலான வெந்நீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, 10 நிமிடம் வரை கால்களை வைத்திருக்கலாம். வலி அதகமிருப்பின் தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.