உடல் வெப்ப நிலை பராமரிப்பு மிகவும் அவசியம்!

மனித உடலின் சராசரி வெப்ப நிலை, 98.4 டிகிரி பாரன்ஹீட். புறச் சூழலில் உள்ள வெப்பநிலை அதைத்தாண்டி அதிகரிக்கும் போது அந்த வெப்பம் உடலில் கடத்தப்படுகிறது.

உச்ச வெப்பநிலை தருணத்தில் உடலானது தன்னைத் தானே குளிர்விக்க பல்வேறு வகையான முயற்சிகளை மேற்கொள்ளும்.

ஒரு கட்டத்துக்கு மேல் அது பலனளிக்காத நிலையில் மயக்கம், உணர்விழப்பு வெப்பவாதம் ஆகியவை ஏற்படும்.

நேரடியாக வெயிலில் செல்லா விட்டாலும் சூரிய வெப்பம் வேறு சில வகைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

வெப்பம் நிறைந்த அறை, வெயிலில் நிறுத்தப்பட்டிருக்கும் கார் போன்ற காற்றோட்டம் இல்லாத இடங்களுக்குள் செல்லும் போது உடல் வெப்பநிலை மிகவும் அதிகரிக்கும்.

நாக்கு வறண்டு போதால், தசைப்பிடிப்பு, சிறுநீர் அடர் மஞ்சளாக செல்லுதல், கை, கால் தளர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு உள்ளிட்ட சிரமங்கள் ஏற்படும்.

எனவே, கவனமுடன் இருக்க வேண்டும். நீர்ச்சத்து குறைந்தால், உடனே தண்ணீர் அருந்தி உடலை இயல்புக்கு கொண்டு வர வேண்டும்.