வலிப்பு நோய் தவிர்ப்பு மருந்துகளை பிரசவ காலத்தில் உட்கொள்ளலாமா?
பிரசவ காலத்தில் எந்த மருந்தையும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே எடுக்க வேண்டும்.
ஒருவருக்கு வலிப்புநோய் வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாக டாக்டரால் கண்டறியப்பட்டால் நிச்சயம் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை மருந்து எடுக்காமல் இருந்து வலிப்பு பெரியளவில் வந்தால் கருவில் வளரும் சிசுவுக்கு செல்லும் ஆக்சிஜன், ரத்தம் குறையும்.
அதனால் கருவின் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் அபாயமுள்ளது.
எல்லா மருந்துகளையும் பேறு காலத்தில் கொடுக்க முடியாது.
எதை கொடுக்கலாம், எதை எடுக்கக்கூடாது என்பதை டாக்டர் ஆலோசனைபடிதான் முடிவு செய்ய வேண்டும்.