மதுப்பழக்கம்: சரியான தேர்வு அல்ல
மது அருந்துவதால் வாயு, வீக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.
தினமும் அதிகமாக மது அருந்துவதானால்,ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதையே தொடர்ந்து செய்தால் ரத்த அழுத்தம் நீண்ட காலமாகத் தொடர வழிவகுக்கும்.
மது குடிப்பது வளர்சிதை மாற்றத்தைக் கடினமாக்குவதோடு, கல்லீரலில் கொழுப்பு சேர வழிவகுக்கும். நாளடைவில் இயக்கம் குறைந்து கல்லீரல் பாதிப்படைய வாய்ப்புள்ளது.
மது மூளையின் தகவல் தொடர்பு பாதைகளில் குறுக்கிடுகிறது. மேலும் மூளையின் தோற்றம் மற்றும் வேலை செய்யும் விதத்தைப் பாதிக்கலாம். இது மத்திய நரம்பு மண்டலத்தைப் பாதித்து, மந்தமான பேச்சு போன்ற சிக்கலான அறிகுறிகளுக்கு வழிவகுக்கும்.
தினமும் அதிகப்படியான மது அருந்துவதால் கணையத்தில் நாள்பட்ட வீக்கம், கணைய புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.