கோடையில் பரவும் அம்மை நோய்? எப்படி தவிர்க்கலாம்?
அம்மை நோய் ஒரு வைரஸ் நோய். ஒருவருக்கு ஒரு முறை தான் வரும். ஒரு சிலருக்கு மட்டுமே 2வது முறையாக வரும் என கூறப்படுகிறது.
மற்றபடி பயப்படக்கூடிய நோய் அல்ல. எதிர்ப்பு சக்தி இருந்தால் அதுவே சரியாகிவிடும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக இந்நோய் வந்தால் அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
நீர் ஆகாரங்கள், புரோட்டின் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் 2 முறை குளிக்க வேண்டும். நோய் வந்தவர்களுக்கு உடம்பில் புண்ணாகும் பட்சத்தில் சலம் வைக்கக் கூடும்.
டாக்டர் பரிந்துரைப்படி மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் விரைவில் குணமாகும்.