மன ஆரோக்கியத்தை மேம்படுத்த இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க....!
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ், கேக், பேக்கரி உணவுகள்,
இனிப்புகள் ஆகியவற்றை தவிர்க்கவும்; இது கவனிக்கும் திறனைக் குறைக்கும்.
சர்க்கரை நிறைந்த தின்பண்டங்களான மிட்டாய்கள், குளிர்பானங்கள் வாங்குவதை தவிர்க்கவும்; இது ஆற்றல் அளவை அலைக்கழிக்கச் செய்யும்.
நல்லெண்ணெய், கடலை எண்ணெய், பருப்புகள், நட்ஸ்கள், மீன் போன்ற ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். இது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தும்.
திண்பண்டங்களாக பழங்கள், சுண்டல், நன்கு வேகவைத்த முட்டை, சுட்ட
வள்ளிக்கிழங்கு, மக்காச்சோளம் ஆகியவற்றை சாப்பிடும் போது, அதிக ஆற்றல்
கிடைக்கும்.
தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது மன அழுத்தம் இல்லாமல் இருக்க உதவும்.
இவற்றை எல்லாம் பின்பற்றுவதன் மூலம் ஒட்டுமொத்த மன ஆரோக்கியம் மேம்படக்கூடும்.