அதிக உஷ்ணம்.. உடலை குளிர்விக்க டிப்ஸ்...
மதிய நேரத்தில் சிறிதளவு இஞ்சி, மல்லி தழை, உப்பு சேர்த்த நீர் மோர் குடிப்பது, உஷ்ணத்தில் இருந்து பாதுகாப்பு தரும்.
வெட்டிவேர், சீரகம் சேர்த்து கொதிக்க வைத்த நீர் பருகலாம். இதனால், உடல் உள்ளுறுப்புகள் குளிர்ச்சி அடையும்.
அதிக உடல் சோர்வு உள்ளவர்கள், எலுமிச்சை பழச்சாறுடன் சிறிது உப்பு, சர்க்கரை சேர்த்து பகல் நேரங்களில் பருகலாம்.
பாட்டிலில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள், உடலுக்கு உஷ்ணத்தை விளைவிக்கின்றன; அவற்றை தவிர்ப்பது நல்லது.
நீர்ச்சத்து அதிகரிக்க வெள்ளரி பிஞ்சு, முலாம் பழம், தர்பூசணி, மாதுளை, நெல்லி, வில்வம் பழங்களை தினமும் சாப்பிடலாம்.
குறிப்பாக பழச்சாறாக குடிக்காமல், முழு பழமாக சாப்பிட வேண்டும்.
அடர்த்தியான நிறங்களில் உடை அணிவதை தவிர்த்து, மெல்லிய, வெள்ளை நிற பருத்தி ஆடைகளை அணிவது, வெயிலில் இருந்து உடலை பாதுகாக்கும்.