சருமப் புத்துணர்ச்சிக்கு காபி பேஸ்பேக்!
காபியை பேஸ் பேக்காகப் பயன்படுத்துவது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, தோல் அழற்சி மற்றும் முகப்பருவைக் குறைக்கிறது.
பிடிவாதமான முகப்பருக்கள், கரும்புள்ளிகளை காபித் தூள் எளிதில் நீக்கும்.
காபி தூளில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆன்டிஏஜிங் பண்புகள் உங்கள் சருமத்தை பிரகாசமாக்கும்
காபியில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், சருமத்தில் உள்ள பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும்.
உங்கள் முகத்தில் காபித்தூளை சிறிதளவு தண்ணீரில் கலந்து மெதுவாக தேய்க்கவும். இது முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகப்பருவைப் போக்கும்.
கருவளையத்தை போக்க அரை டீஸ்பூன் காபித் தூளுடன் 1 டீஸ்பூன் தேன் கலந்து கண்களின் கீழ் தடவி, 10-15 நிமிடங்கள் கழிந்து குளிர்ந்த நீரில் கழுவவும்.
இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. கருவளையமும் விரைவில் மறையும்.
காபியில் உள்ள பாலிபினால்கள் புற ஊதா கதிர்களுக்கு எதிராக போராடும். மேலும் சூரிய ஒளியின் காரணமாக ஏற்படும் சரும பாதிப்பை குறைக்கிறது.
காபி தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து, காட்டனில் நன்கு நனைத்து,
வீங்கிய பகுதியில் தேய்க்க வேண்டும். அதன் மூலம் வீக்கம் படிப்படியாக
குறையும்.