உடலில் ஏற்படும் பூஞ்சை தொற்று பாதிப்புக்கு தீர்வு என்ன?

கோடை காலங்களில் பூஞ்சை தொற்று பாதிப்பு(படர் தாமரை) அதிகமாக இருக்கும்.

குறிப்பாக குளத்தில் குளிப்பவர்களுக்கு பூஞ்சை தொற்று பாதிப்பு அதிக அளவில் ஏற்படும்.

வியர்வை, ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது பூஞ்சை தொற்று ஏற்படும்.

இது போன்ற நேரங்களில் உடலில் அரிப்பு ஏற்பட்டு, தழும்புகள் போன்று காணப்படும்.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் துணிகள், உடைகள், உள்ளாடைகளை மற்றவர்கள் பயன்படுத்தும் போது இந்த அவர்களுக்கும் பரவும்.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக அருகில் உள்ள தோல் நோய் டாக்டர்களை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சை பெற வேண்டும்.

நோய் பரவாமல் தடுக்க காலை, இரவு என இரு நேரங்களிலும் குளிக்க வேண்டும்.

ஆடைகளை வெயிலில் உலர வைக்க வேண்டும். குறிப்பாக உள்ளாடைகளை வெயிலில் உலர வைத்து பிறகே பயன்படுத்த வேண்டும்.