இடது மூளை - வலது மூளைக்கு என பயிற்சி அளிப்பதால் பயன் உண்டா?

அடிப்படையில் உடலின் இடது பக்கத்தை வலது மூளையும், வலது பக்கத்தை இடது மூளையும் தான் கட்டுப்படுத்துகிறது.

இடது பக்க மூளை மொழி, பேசுவதும், வலது பக்க மூளை பார்ப்பது, இடைவெளி நுண்ணறிவு போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.

எல்லோருக்கும் இந்த இரண்டுமே செயல்படும். மூளையின் பின்புறமான அசிப்டல் லோப் மூலம் நிறம், வடிவம் கண்டறிய முடியும்.

டெம்போரல் லோப் மூலம் குறுகிய கால நினைவு, பேசும் போது வார்த்தைகளை நினைவில் வைப்பது, வாசனை நினைவு செய்ய முடியும்.

இது எல்லா மனிதர்களிடமும் உள்ளது. இதை எந்தளவு திறன்பட செய்கின்றனர் என்பது அவரவர் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவை பொறுத்தது.

இடது கையால் எழுதுவதால் எந்த பயனுமில்லையா என்று கேட்டால் அவ்வாறு கூற முடியாது. இடது கையால் எழுதுவது போன்ற சிறு விஷயங்கள் மூளைக்கு ஷாக் கொடுக்கும்.

எப்போதும் செய்யும் பழக்கத்தை மாற்றி செய்வதை நியூரோபிக் ஆக்டிவிட்டிஸ் என்போம். இதன் மூலம் மூளைக்கு ஆக்சிஜன் அதிகமாக போகும்.

இதனால் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். இரு பக்க மூளையை பயிற்சி அளிப்பது என்பதே தவறான கருத்து. ஆனால் நியூரோபிக்ஸ் ஆக்டிவிட்டிஸ் மூலம் மூளையை நன்றாக பார்த்து கொள்ளலாம்.

செருப்பு போட்டு நடந்தால் பின்னர் செருப்பு இல்லாமல் நடப்பது, மண்ணில் விளையாடுவது ஆகியவை மூளைக்கு ஆக்சிஜன் சப்ளையை அதிகப்படுத்தும்.