சுற்றுலாவுக்கு திட்டமிடுவது எப்படி? இதோ டிப்ஸ்...
சுற்றுலா செல்ல முடிவு செய்தவுடனே, 'செக்லிஸ்ட்' தயார் செய்யுங்கள். சேப்டி பின்னில் ஆரம்பித்து, பயணத்துக்கு தேவையான அனைத்தையும் பட்டியலிட்டு, சரிபார்த்து செல்லுங்கள்.
என்ன தான், 'டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு' எடுத்துச் சென்றாலும், கையில் கொஞ்சம் பணம் வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.
சில பேருக்கு பயணத்தின் போது வாந்தி, தலைச்சுற்றல் ஏற்படும். அதற்கான மருந்துகளை மருத்துவரிடம் வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
மொபைல் போனுக்கு தேவையான, 'சார்ஜர், பவர் பேங்க், இயர்போன்' போன்றவை ரொம்பவே முக்கியம்.
தொப்பி, குடை, நெக் பில்லோ, போர்வை, டிரஸ் மற்றும் இடங்களுக்கு ஏற்ற காலணிகள், தண்ணீர் பாட்டில், டிஷ்யூ பேப்பர் உள்ளிடவையும் அவசியம்.
டூத் பிரஷ், டூத் பேஸ்ட், சோப், பேஸ் வாஷ், சன் ஸ்கிரீன், மாய்ஸ்ச்சரைசர், டவல், ஷாம்பூ, கண்டிஷனர், சானிட்டைசர், மாஸ்க் எடுத்து செல்ல மறக்க வேண்டாம்.
இவற்றையெல்லாம் பட்டியலிட்டு, 'பேக்' செய்து விட்டு, டிக்கெட்டை நம்பர் ஒன்னாக சேர்த்து விடுங்கள். அதை தேர்வு செய்த பிறகே, மற்ற பொருட்களைச் சரிபார்த்துக் கிளம்புங்கள்.