பழைய சாதத்தில் சுவையான பக்கோடா! ரெசிபி இதோ...
இரவு வடித்த சாதம் மீந்து விட்டதா. கவலை வேண்டாம். இந்த சாதத்தில் சுவையான பக்கோடா செய்யலாம். இதற்கு பத்து நிமிடம் போதும்.
முதலில் பழைய சாதத்தை நன்றாக பிழிந்து கிண்ணத்தில் போட்டு, நன்றாக பிசையவும். இதில் அரிசி மாவு சேர்த்து கட்டியில்லாமல் பிசைந்து கொள்ளவும்.
அதன்பின் சிறிதாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி தழை, தனியா துாள், மஞ்சள் துாள், சுவைக்கு தேவையான உப்பு சேர்க்கவும்.
பின் சிறிது நீர் சேர்த்து கையில் ஒட்டாத அளவு, பக்கோடா மாவு பதத்துக்கு பிசையவும். அடுப்பில் வாணலியை வைத்து, எண்ணெய் ஊற்றவும்.
காய்ந்த பின், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு, சிறு உருண்டைகளாக்கி எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வறுத்தால் சாத பக்கோடா ரெடி.
தக்காளி சாஸ் அல்லது தேங்காய் சட்னி தொட்டும் சாப்பிடலாம். பள்ளி விட்டு வரும் குட்டீஸ்களுக்கு சூடாக செய்து கொடுத்தால், விரும்பி சாப்பிடுவர்.