4 மாத கர்ப்பத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் இதோ... !
கர்ப்பத்தின் முதல் ட்ரைமெஸ்டர் என்ற முதல் மூன்று மாதம் மசக்கை குமட்டல், வாந்தியால் சரியாக உண்ண முடியாது.
அதேவேளையில், 2ம் ட்ரைமெஸ்டர் காலமான 4ம் மாதத்தில் உணவு மீது விருப்பம் இருக்கும். எனவே அப்போது கருவிலிருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் உணவுகளை பார்க்கலாம்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்... வயிறு விரிவடையும் போது, மலச்சிக்கலை தவிர்க்க பருப்பு, காய்கறி, ஆப்பிள், வாழைப்பழம், உலர் விதைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ளலாம்.
வயிற்றில் வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ஒமேகா கொழுப்பு அமிலங்கள் அவசியம். சோயா, அக்ரூட் பருப்புகள், உலர் விதைகள், சால்மன் மீன், மத்தி மீன் போன்றவற்றை உட்கொள்ளலாம்.
ஃபோலிக் அமிலம் நிறைந்த உணவுகளை எடுக்கும்போது, கருவிலுள்ள குழந்தைக்கு 70% நரம்புக்குழாய் குறைபாடுகளை தடுக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. பருப்புகள், பச்சை இலை காய்கறிகளில் இது அதிகமாக உள்ளது.
4வது மாதத்தில் ரத்த அளவு அதிகரிக்கும் போது இரும்புச்சத்து உள்ள உணவுகள் அவசியம் தேவை. பருப்புகள், உலர் பழங்கள், கோதுமை உணவுகள், கீரைகள், இறைச்சி, பச்சை நிற காய்கறிகளை சாப்பிடலாம்.
குழந்தையின் வலுவான எலும்புகளின் வளர்ச்சிக்கு கால்சியம் முக்கியம் என்பதால், தினமும் 2 டம்ளர் பால் குடிக்க வேண்டும். பால் உணவுகள், தயிர், சீஸ், கீரைகள், மீன் போன்றவற்றை சேர்க்க வேண்டும்.
புரதம் நிறைந்த பருப்புகள், விதைகள், கோதுமை, ராகி, ஓட்ஸ், பயறு வகைகள், கோழி இறைச்சி, கீரைகள், காளான்கள் மற்றும் சோயா பொருள்கள் என உட்கொள்ள வேண்டும்.