தில்லையுள் கூத்தனே.. தென்பாண்டி நாட்டானே...! இன்று ஆருத்ரா மஹா தரிசன விழா !
திருப்பூர் மாவட்டம், அவிநாசியிலுள்ள ஸ்ரீ கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ஆருத்ரா மஹா தரிசன விழாவில், சிவகாமி அம்மையுடன் எழுந்தருளிய நடராஜ பெருமான்.
கோவை, மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவை ஒட்டி, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த எம்பெருமான்.
ஆருத்ரா விழா சிறப்புத் தேரோட்டம், சிதம்பரம்.
கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடராஜப் பெருமானுக்கு நடந்த கலச தீர்த்த அபிஷேகம்.
பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ருத்ரலிங்கேஸ்வரர்.
ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் பெரிய கோவிலில் நடராஜர், சிவகாமி அம்பாள், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருவள்ளூர் அடுத்த திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜ பெருமானுக்கு சப்போட்டா பழ அபிஷேகம் நடந்தது.
புதுடில்லி, ஸ்ரீ சுவாமிநாத சுவாமி சேவா சமாஜ் சார்பில் உத்தர சுவாமி மலை கோவிலில் நடந்த விழாவில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நடராஜர்.