கல்லீரல் ஆரோக்கியம் ஏன் அவசியம் ?

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொண்டாலே பிற உறுப்புகளும் சிறப்பாக வேலை செய்யக்கூடும். .

இது முழுமையாக பழுதடைந்தால், சிறுநீரக பாதிப்பும் உண்டாகும். அதாவது சிறுநீர் கழிப்பதில் பிரச்னை ஏற்படக்கூடும்; ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்.

கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களால் நான்கு அடிக்கூட இயல்பாக நடக்க முடியாது. மூச்சு வாங்கும்; நுரையீரலும் சரிவர செயல்படாது.

மூளையின் செயல்பாடும் பாதிக்கப்படுவதால், இயல்பாக யோசிக்க முடியாது; தூக்கம் வராது.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் சாதாரண தொற்று ஏற்பட்டால் கூட, அதிகளவில் பாதிக்கப்படுவர்.

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தேவைக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. கார்போஹைட்ரேட் உணவுகளை குறைத்துக் கொண்டு, புரத உணவுகளை அதிகமாக சேர்க்க வேண்டும்.

அதேப்போல தேவையில்லாத கலோரிகளை குறைக்க நடைபயிற்சியும் அவசியமானது.