பாகற்காயின் இனிக்கும் ஆரோக்கிய நன்மைகள்

பாகற்காயில் நிறைந்துள்ள வைட்டமின் சி நோய் எதிர்பாற்றல் மற்றும் காயங்களை ஆற்றும் தன்மையை அளிக்கிறது.

இதிலுள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் கண்களுக்கு நன்மை பயக்கும்.

பாகற்காய் சாப்பிடுவதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கலாம்.

இவை தவிர வைட்டமின்கள், ஃபோலேட், ஜிங்க், இரும்பு, பொட்டாசியம் ஆகியவை இதிலுள்ளன. கருவிலுள்ள குழந்தையின் நரம்பு வளர்ச்சிக்கு இது உதவும்.

கசப்பான பாகற்காயில் கேடசின், எபிகேடசின், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் கேலிக் அமிலம் உள்ளிட்ட பல சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன.

இவை புற்றுநோய்கள், முதுமை, இதய நோய்கள் மற்றும் நாள்பட்ட நோய்களை தவிர்க்க உதவுகிறது.

இதிலுள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.

இதன் ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் பண்பு, ரத்தம் மற்றும் கல்லீரல் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

குறிப்பாக, கல்லீரல் நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது. குடியினால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தையும் இவை குறைப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.