காலை பிரேக்பாஸ்ட்டுக்கு ஈஸியான மேங்கோ சியா புட்டிங்
தேவையானப் பொருட்கள் : பாதாம் பருப்பு : 10, அல்போன்சா
மாம்பழம் : 1, சியா விதைகள் : 1/4 கப், ஏலக்காய் பொடி : 2 சிட்டிகை,
லிக்விட் வெல்லம் : 1 டீஸ்பூன்.
முதல் நாள் இரவு ஊறவைத்த பாதாம்
பருப்புகளின் தோலை நீக்கி, தண்ணீர் சேர்த்து மிக்சி ஜார் அல்லது
பிளெண்டரில் அரைத்து, பாதாம் பால் ஆக மாற்றிக் கொள்ளவும்.
இதில் சியா விதைகள், லிக்விட் வெல்லம் மற்றும் ஒரு சிட்டிகை ஏலக்காய் தூளை சேர்த்து நன்றாக கலக்கி 10 நிமிடம் ஊற வைக்கவும்.
முதல் நாள் இரவே கூட பாதாம் பாலில் சியாவிதைகளை போட்டு, பிரிட்ஜில் வைக்கலாம்.
இனிப்பு சுவையை விரும்பாதவர்கள் லிக்விட் வெல்லத்தை தவிர்த்து விடலாம்.
அல்போன்சா
மாம்பழத்தை தோலை நீக்கி விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பாதி மாம்பழத் துண்டுகளை ஒரு டம்ளரில் போட்டு ஸ்பூன் அல்லது மரத்துண்டால்
ஓரளவுக்கு நசுக்கி விடவும்.
இதன் மீது ஒரு லேயராக ஊறவைத்த சியா
விதைகளை சேர்க்கவும். தொடர்ந்து சிறிதளவு மாம்பழத்துண்டுகள், ஊறவைத்த சியா
விதைகள் என டம்ளரில் நிரப்பவும்.
பினிஷிங் டச் ஆக மீண்டும்
சிறிதளவு மாம்பழ விதைகள், நறுக்கிய பாதாம் பருப்பு மற்றும் ஏலக்காய் பொடியை
தூவி அலங்கரித்தால் போதுமானது. இப்போது சுவையான சியா மற்றும் மேங்கோ
புட்டிங் ரெடி.