கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நம் வீடுகளில் நெய் அப்பம் எப்படி செய்யலாம் என தெரிந்து கொள்ளலாம். இதை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.

தேவையானவை: கோதுமை, பொடித்த வெல்லம் - தலா 100 கிராம், பச்சரிசி, தேங்காய் துருவல் - தலா இரண்டு தேக்கரண்டி, நெய் - 100 மில்லி, சிறிதளவு ஏலக்காய்துாள்.

செய்முறை: கோதுமையுடன், பச்சரிசி சேர்த்து, இரண்டு மணி நேரம் ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டவும்.

பின்னர், வடிகட்டிய அரிசி, கோதுமையுடன், வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்து நைஸாக அரைத்து கொள்ளவும். பின் ஏலக்காய்த்துாள் கலந்து கொள்ளவும்.

அடுப்பில் பணியாரக்கல்லை சூடாக்கி, எல்லாக் குழிகளிலும் சிறிதளவு நெய்விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.

பின்னர், ஒவ்வொரு குழியிலும் மாவை ஊற்றவும். ஒரு பக்கம் வெந்ததும் மறு பக்கத்தை திருப்பி போடவும்.

இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும். நெய் மணத்துடன், மிகவும் ருசியாக இருக்கும் இந்த அப்பம்!