மகிழ்ச்சியாக வலம் வர உதவும் 8 மேஜிக்கல் டிப்ஸ்

சமூக வலைத்தளங்களில் அதிக நேரம் ஸ்க்ராலிங் செய்வது அமைதியின்மை, ஆரோக்கியமின்மைக்கு வழிவகுக்கும் என்பதால் குறிப்பிட்ட வரையறை நிர்ணயிக்க வேண்டும்.

புன்னகை உங்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி அமைதிப்படுத்தும் எளிய செயலாகும்.

10 நிமிட நடைப்பயிற்சி வாக்கிங் அல்லது எளிய நடனம் ஆகியவை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி, மன ஆரோக்கியத்தை அதிகரிக்கும் எண்டோர்பின்களை உற்பத்தி செய்யும்.

பிறரை பாராட்டுவது, உதவுவது மற்றும் தன்னார்வ சேவை செயல்களை செய்வது, மனதுக்கு ஆத்ம திருப்தியையும், மகிழ்ச்சியையும் அளிக்கக்கூடும்.

உங்களின் அறையை அவ்வப்போது சுத்தப்படுத்தி, பொருட்களை ஆங்காங்கே இடம் மாற்றியமைப்பது மனக்குழப்பத்தை தவிர்க்க உதவும்.

தூக்கமின்மை உடல், மன ஆரோக்கியத்தை பாதிக்கும்; அதேவேளையில் ஆழ்ந்த தூக்கம் மகிழ்ச்சியை மேம்படுத்தும் ஒன்றாகும்.

பசுமையான இடங்களில் இருப்பது உங்களின் மன அழுத்தத்தை குறைக்கும் என்பதால், இயற்கையுடன் அவ்வப்போது நேரத்தை செலவிடுங்கள்.

வெறுப்பு அல்லது எதிர்மறை உணர்ச்சிகள் உங்களுக்கு அழுத்தத்தை தரக்கூடும். எனவே, எதையும் ஏற்றுக்கொள்ளவும், மன்னிக்கவும், விட்டுக்கொடுக்கவும் முன்வர வேண்டும்.