சிறுநீரக செயலிழப்பு என்றாலே டயாலிசிஸ் செய்ய வேண்டுமா?

சிறுநீரக செயலிழப்பு என்றாலே, 'டயாலிசிஸ்' செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால், அதற்கான வாய்ப்புகள் எதிர்காலத்தில் அதிகமுள்ளன.

சிறுநீரக செயலிழப்பில் 5 நிலைகள் உள்ளன. முதல் நான்கு நிலைகளை, தீவிரமாகாமல், மாத்திரைகளால் கட்டுப்படுத்த முடியும். 5வது நிலையில், டயாலிசிஸ் செய்ய வேண்டியிருக்கும்.

நீரிழிவு பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருந்தால், டாக்டரின் ஆலோசனைப்படி ஸ்கிரீனிங் செய்தால், முதல் 2 நிலைகளிலேயே கண்டறியலாம்.

தொடர்ந்து, மருந்துகள், உணவுக் கட்டுப்பாடு வாயிலாகவே சரி செய்யலாம். அது போல டயாலிசிஸ் தேவைப்பட்டாலே, இது வாழ்வின் கடைசி கட்டம் என்பதும் இல்லை.

வாரத்துக்கு இரண்டு, மூன்று முறை டயாலிசிஸ் செய்து, 15 ஆண்டுகளுக்கு மேல் இயல்பாக வாழ்பவர்கள் உள்ளனர்.

பிறவியிலேயே சிறுநீரக கோளாறு, இளம் வயதில் பிரச்னை இருந்தாலும் டயாலிசிஸ் செய்து இயல்பாக வாழலாம்.

சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டால், சிறுநீரக மாற்று தான் ஒரே வழி. அது வரையிலும் சிறுநீரகங்களின் வேலையை இயந்திரம் செய்யும்.