நாவல்பழத்தின் 6 ஆரோக்கிய நன்மைகள்
கொஞ்சம் இனிப்பு, கொஞ்சம் புளிப்பு மற்றும் அதிக துவர்ப்பு சுவையுடையது நாவல் பழம். இதன் விதை, இலை, பழம் என அனைத்துமே ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
இதில் பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் சி, ஏ மற்றும் பி, நார்ச்சத்து, புரதச்சத்து உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன.
நாவல் பழத்தை அளவாக சாப்பிடும்போது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். பெருந்தமனி தடிப்பு, இதயம் தொடர்பான பிரச்னைகள் போன்ற பாதிப்புகளை குறைக்கிறது.
இதிலுள்ள வைட்டமின் சி, இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
இதன் கிளைசெமிக் பண்புகள் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
இதில் குறைந்த கலோரிகளே உள்ளன; நார்ச்சத்து அதிகமுள்ளதால் செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால் கொழுப்பை குறைத்து, உடல் எடையை சீராக வைக்கலாம்.
அதிக இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி உள்ளதால், ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரித்து உடலில் ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
சரும ஆரோக்கியத்துக்கு தேவையான வைட்டமின் சி இதிலுள்ளது. ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உடலில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதால், சருமத்துக்கு இளமையான தோற்றம் தருகிறது.