இன்று சர்வதேச அல்பினிசம் தினம்

'அல்பினிசம்' என்பது தமிழில் வெண்தோல் குறைபாடு என அறியப்படுகிறது.

இது ஒரு நபரின் முடி, தோல், கண்களில் மெலனின் நிறமி குறைவாகவோ அல்லது உற்பத்தி செய்யாமலோ இருக்கும் போது ஏற்படும் ஒரு மரபணு கோளாறு.

இதனால் இவர்களால் சூரிய ஒளி, பிரகாசமான ஒளியை எதிர்கொள்ள முடிவதில்லை.

மேலும் இந்த தோற்றத்தால் சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூன் 13ல் சர்வதேச அல்பினிசம் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

வட அமெரிக்கா, ஐரோப்பாவில் 20 ஆயிரம் பேரில் ஒருவருக்கு இப்பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது.