தைராய்டு கட்டியை அலட்சியப்படுத்தக் கூடாது
தைராய்டு சுரப்பியில் கட்டி தோன்றினால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. உடனடியாக மருத்துவர் ஆலோசனை பெற்று பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
தைராய்டு சுரப்பியில் மூன்று விதமான பிரச்னைகள் ஏற்படலாம். ஒன்று தைராய்டு அதிகமாக வேலை செய்தல், இரண்டாவது வேலை செய்யாமல் போவது, மூன்றாவது புற்றுநோய் கட்டி.
அதிலும் குறிப்பாக தைராய்டு சுரப்பியில் கட்டி தோன்றினால் அதை அலட்சியப்படுத்தாமல், மருத்துவர் ஆலோசனை பெறவேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
உரிய பரிசோதனை செய்து, இது சாதாரண கட்டியா அல்லது புற்றுநோய் கட்டியா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
புற்றுநோய் என உறுதி செய்யப்பட்டால், அறுவை சிகிச்சை வாயிலாக சுரப்பியை முழுவதுமாக அகற்ற வேண்டும் என கூறப்படுகிறது.
சிகிச்சைக்குப்பின், கழுத்தில் மீதம் இருக்கும் தைராய்டு அணுக்களில் வேறு எங்காவது புற்றுநோய் பரவியுள்ளதா என கண்டறிய வேண்டும்.