ரத்த கட்டு குணமாக வீட்டு வைத்தியம் சில
நமது உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் அடிபடும் போது வெளிப்புற தோல் பகுதியின் அடியில் ரத்தம் உறைந்து ரத்த கட்டு ஏற்படுகிறது.
ரத்த கட்டு அறிகுறிகள் அடிபட்ட பகுதியில் உள்ள தோலுக்கு அடியில் ரத்தம் உறைந்து அந்த இடத்தில் சிறிய புடைப்பு போல் இருக்கும்
இதை குணமாக்கும் சில இயற்கை வைத்திய முறைகளைப் பற்றி பார்ப்போம்.
தரமான மஞ்சள் பொடியை சிறிது வெந்நீர் விட்டு கலந்து, அந்த கலவையை ரத்த கட்டு ஏற்பட்ட இடங்களில் களிம்பு போல் வைத்து, ஒரு வெள்ளை துணியால் கட்டு போட வேண்டும்.
ஆமணக்கு மற்றும் நொச்சி இலைகளை விளக்கெண்ணெயில் வதக்கி, அந்த இலைகளை ஒரு வெள்ளை துணியால் கட்டி பாதிக்கப்பட்ட இடங்களில் ஒத்தடம் கொடுத்து வர ரத்த கட்டு கரையும்.
அமுக்கிராங்கிழங்குச் சூரணத்தை வாங்கி, ஒரு கோப்பை பாலில் அரை ஸ்பூன் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் ஐந்து நாட்கள் குடித்து வர, ரத்தக்கட்டு கரைந்துவிடும்.
வெள்ளரிக்காயில் சிலிக்கா என்ற நுண்ணிய கனிமம் உள்ளது. இந்த கனிமம், இணைப்பு திசுக்களை வலிமையாக்க உதவுகிறது.
வெள்ளரிக்காயை நறுக்கி , ஒரு துண்டை ரத்தக் கட்டின் மீது வைக்கலாம். விரைவில் குணமாகும்.