இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றுமா?

இரவு நேரங்களில் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றுவதும், சிறிது நேரம் கூட சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதும், சிறுநீரக செயல் இழப்புக்கான அறிகுறியாக இருக்கலாம்.

பொதுவாக, முதுமையில் சிறுநீரகத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, அதன் செயல்பாடுகளும் குறையும்.

இதுபோன்ற சமயத்தில், சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல் பருமன், போன்ற பிரச்னைகள் கட்டுப்பாடின்றி இருப்பின், பெரிய பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

முதுமை வயதை எட்டிய பின்னரே, பலர் ஆரோக்கியத்தை கண்டுகொள்ளவில்லையே என வேதனைப்படுகின்றனர்.

சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவை வந்துவிட்டால், எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் கவனம் வேண்டும். வயதாகும் போது சிறுநீரகத்தின் செயல்திறன் குறையும்.

ஆண்களுக்கு 50 வயதுக்கு மேல், சிறுநீரக நீர்ப்பையில் சதை வளர்ச்சி ஏற்பட்டு, சிறுநீர் செல்லும் பாதையை அடைத்து விடுகிறது.

ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தினால் சரிசெய்து விடலாம்; இறுதியில் சிறுநீர் வராமல், வேறு சில நோய்கள் உண்டாக காரணமாக அமைந்துவிடும்.