உயர் ரத்த அழுத்த பாதிப்பை தவிர்க்க கர்ப்பிணிகள் என்ன செய்யலாம்?
உயர் ரத்த அழுத்தம் உள்ள கர்ப்பிணிகள் மகப்பேறு டாக்டரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
ரத்த அழுத்த அளவு, கால் வீக்கம் சிறுநீரில் புரதம், எடை அதிகரிப்பு போன்றவற்றை டாக்டர் மூலம் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும்.
மருந்துகளை சுயமாக நிறுத்துவதோ அல்லது அளவை மாற்றுவதோ கூடாது.
சில
மருந்துகள் கர்ப்ப காலத்தில் பாதுகாப்பற்றவையாக இருக்கலாம் என்பதால்
டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உப்பின் பயன்பாட்டைக் குறைப்பது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்.
பதப்படுத்தப்பட்ட உணவு, ஊறுகாய், அப்பளம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
யோகா, தியானம், மூச்சுப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.