இன்று உலக சிறுகோள் தினம்
சூரியனை சுற்றிவரும் பூமி, செவ்வாய் போன்ற கோள்களைப்போல 'அஸ்ட்ராய்டு' எனும் சிறுகோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. இவை கோள்களை விட சிறியது.
1908 ஜூன் 30ல் ரஷ்யாவின் துங்குஸ்கா பகுதியில் சிறுகோள் விழுந்தது.
2150 சதுர கி.மீ., சுற்றளவில் இருந்த 8 கோடி மரங்கள் தரைமட்டமாகின.
இந்நிகழ்வை நினைவுபடுத்தும் விதமாக ஜூன் 30ல் சர்வதேச சிறுகோள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சிறுகோள்களில் இருந்து பூமியை பாதுகாப்பதே இத்தினத்தின் நோக்கம்.
விண்வெளியில் 10 லட்சம் சிறுகோள்கள் சுற்றுகின்றன. சிறுகோள் ஒன்று பூமியுடன் மோதினால், அது பேரழிவுகரமான விளைவுகளை ஏற்படுத்தும்
நாசா போன்ற அமைப்புகள் பூமியை நோக்கி வரும் சிறுகோள்களைக் கண்டறிந்து, அவற்றின் பாதையை மாற்ற அல்ல தகர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளகின்றன.