மெனோபாஸ் காரணமாக உண்டாகும் பாதிப்புகளுக்கு தீர்வு இதோ
பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பிறகுள்ள காலத்தை 'மெனோபாஸ்'
என்பர். 45 முதல் 55 வயதிற்குள் எப்போது வேண்டுமானாலும் மாதவிடாய் திடீரென
நிற்கலாம்.
அதற்கு பிறகு 'மெனோபாஸ்' வரும் போது பெண்கள் தங்கள் உடல்நலனில், முன்பை விட அதிக கவனம் செலுத்த வேண்டும்.
மாதவிடாய் நிற்கும் போது 'ஈஸ்ட்ரஜன்' என்ற ஹார்மோன் சுரப்பது
குறைவதால் இதுவரை பெண்களுக்கு இருந்த உடல்ரீதியான பாதுகாப்பு குறையும்.
இதய ரத்தகுழாய் அடைப்பு, எலும்பு தேய்மானம், கால்சியம் குறைவு, பெண் உறுப்பில் வறட்சி, சிறுநீர்ப் பாதை தொற்று போன்ற பிரச்னைகள் உண்டாகும்.
மேலும், உடல் திடீரென வெப்பமாகி தலைவலி வருதல், தோலில் வறட்சி போன்ற பிரச்னைகளும் வரக்கூடும்.
உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லாத பெண்களும் மாதவிடாய்
நின்ற பின், தினமும் அரைமணி நேரம் உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா ஏதாவது
ஒன்றை கட்டாயம் செய்ய வேண்டும்.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
நீர்ச்சத்துள்ள காய்கறி, பழங்கள், கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.