இன்று விளையாட்டு பத்திரிகையாளர் தினம்
இனம், நாடு, சாதி, மதம், மொழி எல்லாவற்றையம் கடந்து உலகை ஒருங்கிணைப்பது விளையாட்டு.
செய்தியாளர் என்பவர் உள்நாட்டு நிகழ்வுகள், கலவரங்கள், அரசியல், வணிகத்தை மட்டும் செய்தியாக அளிப்பதில்லை.
உலகில் நடக்கும் பல்வேறு வகை விளையாட்டு போட்டிகள் தொடர்பான செய்தியை கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் விளையாட்டு பத்திரிகையாளர்கள்.
மேலும் இதன் மூலம் விளையாட்டு பற்றிய அறிவையும், மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை இவர்கள் செய்கின்றனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது 1924 ஜூலை 2ல் சுவிட்சர்லாந்தில் விளையாட்டுக்கான பத்திரிகையாளர் சங்கம் தொடங்கப்பட்டது.
இதன் 70வது ஆண்டு நினைவாக 1994 ஜூலை 2ல் உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் தொடங்கப்பட்டது.
இவர்களது பணியை பாராட்டுவதே இத்தினத்தின் நோக்கமாகும்.