இரவு பகல் பாராமல் லேப்டாப் பயன்படுத்துவதால் ஆண்களுக்கு பாதிப்பு
ஆன்லைன் வசதிகள் அதிகரிப்பு காரணமாக ஆபாச படங்கள் பார்ப்பது அதிகரித்துவிட்டது; தேவையற்ற பாலியல் ரீதியான குழப்பங்கள், பிரச்னைகள், சிக்கல்கள் ஏற்படுகின்றன.
ஆபாச படங்களுக்கு அடிமையாகும் ஆண்களுக்கு, ஆண்மைக்குறைவு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி, கொரோனா பரவலுக்கு பின், ஆண்களின் விந்தணு எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது.
குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது, எதிர்கால மனித சமூகத்துக்கு சவாலாக அமையலாம்.
இரவு, பகல் வித்தியாசமின்றி மணிக்கணக்கில் லேப்டாப்பில் வேலை செய்யும் இளைஞர்கள் அதிகம். இதனால், ஆண்களின் விந்தணு உற்பத்தி பாதிக்கப்படக்கூடும்.
இறுக்கமான ஆடைகள், காற்றோட்டம் இல்லாத உடைகள், ஆண்களுக்கு நல்லதல்ல. அதிக வெப்பம் மிகுந்த இடங்களில் பணியாற்றும் ஆண்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம்.