இன்று உலக ஒவ்வாமை தினம்
உலக ஒவ்வாமை தினம் ஆண்டுதோறும் ஜூலை 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
உலக ஒவ்வாமை அமைப்பு (WAO) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் அனுசரிக்கிறது.
ஒவ்வாமை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்
துாசி, விலங்குகளில் ரோமம், பூக்களின் மகரந்தம் உள்ளிட்டவற்றால் ஒவ்வாமை எனும் அலர்ஜி ஏற்படுகிறது.
நமக்கு ஒத்துக்கொள்ளாத ஒரு பொருள், நமக்குள் போகும்போது அதை வெளியேற்றும் முயற்சியாக நமது உடம்பு வெளிப்படுத்தும் அறிகுறிகள்தான் அலர்ஜி.
ஒவ்வாமை உள்ளவர்களுக்கு நோயெதிர்ப்பு அமைப்பு, பலவீனமாக இருக்கும்.
கண் எரிச்சல், சிவந்து போகுதல், அதிக கண்ணீர் போன்றவை ஏற்படலாம். தும்மல், மூக்கடைப்பு, சளி, தொண்டை கரகரப்பு ஆகியனவும் வரலாம்.
அலர்ஜி ஏற்படுத்தும் அந்த குறிப்பிட்ட பொருளை, தவிர்க்க வேண்டியது மிக மிக முக்கியம்.
அலர்ஜியினால் ஏற்படும் தொந்தரவுகளை பொறுத்து, மாத்திரைகளும் மருந்துகளும் வேறுபடும்.