கர்ப்ப காலத்தில் நீண்ட தூர பயணம் மேற்கொள்ளலாமா?

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பொதுவான கேள்வி இது.

கர்ப்ப காலத்தின் முதல் மற்றும் கடைசி மூன்று மாதங்கள் நீண்ட துார பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

13வது வாரம் முதல் 28 வது வாரம் வரை உங்களுடைய கர்ப்பத்தில் எவ்வித சிக்கலும் இல்லாவிட்டால், டாக்டரின் ஆலோசனைக்கு பின் பயணம் மேற்கொள்ளலாம்.

பயணத்தின் போது குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்க இளநீர், மோர், பழங்கள், சரியான அளவு நீர் போன்றவற்றை உட்கொள்ள வேண்டும்.

இதமான பாடல்களை கேட்டு உங்கள் மன அமைதியையும் பாதுகாக்கலாம்.

கர்ப்ப காலம் என்பது நோயல்ல, உங்கள் கர்ப்ப காலத்தினை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.